Skip to main content

மாணவி பலாத்காரம்: சென்னை போலீஸ்காரர் கைது

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
மாணவி பலாத்காரம்: சென்னை போலீஸ்காரர் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் லட்சுமிகாந்த்(30). தமிழ்நாடு காவல்துறை சென்னை பட்டாலியனில் காவலராக உள்ளார். இவருக்கும், நெலாக்கோட்டையை சேர்ந்த நட்ராஜ் மகள் லீலாவதிக்கும் (25) கடந்த மார்ச்சில் திருமணம்  நடந்தது.  இந்நிலையில், பந்தலூரை சேர்ந்த கல்லூரி மாணவி பிரபாவதி(23) தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகார்: 

நானும், லட்சுமிகாந்தும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து விட்டார். தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். சில நாட்களுக்கு முன்புதான் அவர்  திருமணம் செய்தது தெரியவந்தது. எனவே உரிய நீதி வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து லட்சுமிகாந்தை போலீசார் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்