kaamal

Advertisment

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் நேற்று மாலை திடீரென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் சுமார் 10 நிமிடம் கமல்ஹாசனுடன் விஷால் தனியாக பேசியதாக தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்துக்கு பிறகு, நடிகர் விஷால் முதல் முறையாக அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பா? அல்லது சினிமாத்துறை சம்பந்தமான சந்திப்பா? என்று பல கேள்விகள் எழுந்தன.