Skip to main content

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் ஆணை பிறப்பிக்கட்டும்! கி.வீரமணி

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் ஆணை பிறப்பிக்கட்டும்! கி.வீரமணி
 
இந்தியா முழுவதும் ஒரே சட்டம் என்பதால், கேரளாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகமக் கோயிலின் அர்ச்சக ராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசும் அதனைப் பின்பற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-

கேரள மாநில கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணி யாற்றுவதற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த 6 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் இந்தப் பரிந்துரையை வழங்கி யுள்ளது.

கேரளாவைப் பாரீர்!

திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட் டின் கீழ் 1,248 கோயில்கள் உள்ளன. அவற்றில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அந்த அடிப்படையில் தகுதியானவர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு தேவஸ் வம் வாரியத்துக்கு உண்டு.

அதன்படி, 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை வழங்கியுள்ளது. அதில் 26 பேர் பார்ப்பனர்கள்,  மீத முள்ள 36 பேர் பார்ப்பனர் அல்லாத ஜாதிகளைச் சேர்ந்த வர்கள், அதில் தலித்துகள் 6 பேரும் அப்பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தலித்துகளை அர்ச்சகர் களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறை என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலித் தோழர் நுழைந்தார் கருவறைக்குள்

இதனை அடுத்து இந்திய வரலாற்றில் ஆகம கோவில்களில்  முதல் முறையாக தலித் சமுதாயத்தை சேர்ந்த யேடு கிருஷ்ணன், (22), திருவல்லா அருகில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக நேற்று பொறுப் பேற்று கோவில் கருவறையில் பூஜை செய்தார்.
தலித் சமுதாயத்தை சேர்ந்த யேடு கிருஷ்ணன் என்பவர், திருவல்லா அருகில் உள்ள மணப்புரம் சிவன் கோயில் அர்ச்சகராக நேற்று பொறுப்பேற்றார். தன் குரு அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்ற பின் கோயில் தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் கோயில் கருவறைக்குள் சென்று   பூஜை செய்தார்.

யேடு கிருஷ்ணன் சமஸ்கிருத பாடத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட 36 பேரில யேடு கிருஷ்ணன் உட்பட ஆறு பேர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
90 ஆண்டுகளுக்கு முன் இதே கேரளத்தில் தந்தை பெரியார் குடும்பத்துடன் தீண்டாமை ஒழிப்புப் போராட் டத்தினைத் தொடங்கி நடத்தி, வெஞ்சிறையேகி போராட் டத்தினை வெற்றிகரமாக்கி வரலாற்றுச் சிகரத்தில் வைக்கம் வீரர் என்ற புகழுடன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுள்ளார்.

அன்று உயர் ஜாதிகாரர்கள் குடியிருக்கும் வீதிகளில் கீழ் ஜாதியார் நடக்கக் கூடாது என்ற நிலையை எதிர்த்துப்  போராடினார்.
இப்பொழுது கோயில் கருவறைக்குள் வலுவாக பின் பற்றப்படும் தீண்டாமையை எதிர்ப்பதற்கான போராட் டத்தை தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அறிவித்து அந்தக் களத்தில் நின்றபடியே இறுதி மூச்சைத் துறந்தார்.

தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்திட்ட வெற்றி
தந்தை பெரியார் விட்ட பணியை, அவர் போட்டுத் தந்த பாதையில் அன்னை மணியம்மையார் காலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு இன்றுவரை போராட்டக் களத்திலேயே நின்று கொண்டுள்ளோம்.

இதற்கிடையே இந்தப் போராட்டத்தின் வெற்றி நன் னம்பிக்கை முனையை கேரளம் தந்துள்ளது. இதற்காக கேரளாவின்  கம்யூனிஸ்டுக் கட்சியையும், தேவஸ்வம் வாரியத்தையும் பாராட்டுகிறோம்.

வாயார, மனமார, கையார வாழ்த்துகிறோம்! வரவேற்கிறோம்!
இதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் மாமனிதராக யேடு கிருஷ்ணன் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயிலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் அடியைப்பதித்து, அர்ச்சகராகப் பணியைத் தொடங்கியுள்ளார்.

அவரை வாயார, மனமார, கையாரப் பாராட்டி வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். பிறப்பின் அடிப்படை யில் பேதம் விளைவிக்கும் வருணாசிரம மனுதர்மக் கோட்டையின் அஸ்திவாரம் நொறுங்கட்டும் நொறுங் கட்டும்! தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் நடத்திய மனுதர்ம எரிப்புப் போராட்டத்தின் தீப்பிழம்பு ஜாதிய ஆணிவேரை சுட்டுப் பொசுக்கட்டும்! பொசுக் கட்டும்!!
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் செயல்படட்டும்!
தமிழ்நாடு அரசும், இந்து அறநிலையத் துறையும் தந்தை பெரியார் பிறந்த, சுயமரியாதை இயக்கம் பிறந்த, திராவிடர் இயக்கம் பீடு நடைபோடும் தனித்தன்மை மிக்க தமிழ் மண்ணிலேயும் தாழ்த்தப்பட்டவர் உட்பட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனத்தைச் செய்தால் இந்த அரசுக்கு நற்பெயர் கிட்டக் கூடிய வாய்ப்பும் ஏற்படுமே!

இந்தியா முழுவதும் ஒரே சட்டம் தானே

இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தான் - கேரளா வுக்குப் பொருந்தக் கூடியது தமிழ்நாட்டுக்கும் பொருந் தும் அல்லவா?
தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படட்டும்!

இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்