Skip to main content

“தோல்வி பயமே அச்சுறுத்தக் காரணம்” - கி. வீரமணி கண்டனம்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

 "Fear of failure is a threat" - K. Veeramani condemned

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அதேபோல் அரசியல் கட்சி பிரபலங்களும் இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “பாஜகவின் தோல்வி பயமே மாநில அரசுகள், அமைச்சர்களை அச்சுறுத்துவதற்குக் காரணம். நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட திமுக இயக்கம் வெற்றி பெறும் அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக” எனத் தெரிவித்துள்ளார்.

 

'செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கையில் ஆச்சரியமில்லை' எனத் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். அதேபோல், 'மராட்டிய பாஜக அமைச்சர்கள் மூன்று பேர் மீது ஆதாரத்துடன் புகார் அளித்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. எதிர்க்கட்சிகளை மட்டுமே அமலாக்கத்துறை குறி வைத்து நடவடிக்கை எடுப்பது ஏன்' என சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் தெரிவித்துள்ளார். 'மத்திய விசாரணை அமைப்புகளை வைத்துக் கொண்டு மிரட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது' என ஆம் ஆத்மி கட்சி வழக்கறிஞர் அணித் தலைவர் எம். வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்