Skip to main content

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பெட்ரோல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் கலக்கம் 

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

Petrol and diesel prices

 

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது.

 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.45 காசுகளுக்கும், டீசல் ரூ.97.52 காசுகளுக்கும் விற்பனையாகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவிவந்த போர் பதற்றம் காரணமாக உயர்ந்துவந்த  கச்சா எண்ணெய் விலை தற்போது குறையத் தொடங்கிய நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்