காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும் போராட்ட களத்தில் குதித்துள்ளன. தேமுதிக விஜயகாந்த்தும் இன்று மாலை திருவாரூரில் போராட்டம் அறிவித்தார். அத்ன்படி போராட்டத்தில் பங்கேற்க அவர் கும்பகோணம் வழியாக சென்றார்.
கும்பகோணம் வந்தபோது, ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் சென்றார். தனது மகன் சண்முகபாண்டியன் பிறந்தநாளையொட்டி சாமிதரிசனம் செய்தார்.