/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a983_0.jpg)
சேலம் அருகே சாலையை கடக்கும் பொழுது சிறுவன் உட்பட மூன்று பேர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம்திப்பம்பட்டியை சேர்ந்தவர் சென்னன். அவருடைய மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம் மல்லூர் நோக்கி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போதுநெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தையும், பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)