Ashwin violated the ban?-Trouble over published photo

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களால் தற்பொழுது கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில் குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடை செய்யப்பட்ட இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய நண்பர்களுடன் தடையை மீறி குளித்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய நண்பர்களுடன் ஆரல்வாய்மொழி வழியாக அருவிக்கரை வந்து குளித்ததாககூறப்படுகிறது. அண்மையில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பறளியாறு பாறைகூட்டம் பகுதியில் குளிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை வித்திருந்த நிலையில், தடையை மீறி குளித்ததோடு அந்த படங்களை அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சர்ச்சையாகியுள்ளது.