/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4151.jpg)
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அலுவலகத்திற்குள் புகுந்து மாற்றுத்திறனாளி நபர் மற்றும் பெண் ஒருவர் மீது மூவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரேகா என்ற பெண் ஆயிரம்விளக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரில், 'கடந்த 10ம் தேதி 12 மணி அளவில் திருவொற்றியூரை சேர்ந்த ரமணி, அவருடைய சகோதரர் மோகன்தாஸ், தேவி ஆகியோர் அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தவர்கள், என்னை (ரேகா) தாக்கியதோடு அலுவலகத்தில் பணியாற்றி வந்த செந்தில்நாதன் என்ற மாற்றுத்திறனாளி நபரை கடுமையாக தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மேற்கொண்டு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மாற்றும் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளி நபர் மற்றும் பெண் ஒருவர் மீது மூவர் ஈவு இரக்கமின்றிதாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)