Skip to main content

எட்டு லாரிகளில் கடத்தப்பட்ட கலப்பட மணல்

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
எட்டு லாரிகளில் கடத்தப்பட்ட கலப்பட மணல்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாட்சியர் சுப்பிரமணியம் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், பல்லடம் பொள்ளாச்சி சாலையில் கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதாக வந்த செய்தியை அடுத்து காரணம்பேட்டை அருகே சாலையில் வந்த லாரிகளில் மணல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுவந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த எட்டு லாரிகளை வருவாய்துறையினர் பிடித்துள்ளனர். அந்த லாரியில் இருந்த மணல் கலப்பட மணல்போல இருந்ததால் எட்டு லாரிகளையும், அதிலிருந்த மணலையில் பறிமுதல் செய்து, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுசென்றனர்.

வாடசியரின் புகாரின் பேரில், அங்கு வந்த  கனிமவளத் துறையினர் அந்த மணலை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனைக்குப் பின்னரே அந்த மணல் குறித்த உண்மைத் தன்மை தெரியவரும். அதன்பின்னர் தான் கடத்தல் மணல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்