மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு
மணலி மண்டலம் 18வது வார்டுக்குட்பட்ட அண்ணா தெருவில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. நேற்று முன்தினம் இந்த தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து குடிநீர் வாரிய ஊழியர்கள் தொட்டியின் மீது ஏறி பார்த்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று குடிநீர் தொட்டியில் இருந்த இரண்டரை லட்சம் தண்ணீரை குடிநீர் வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். மேலும் சோடியம், குளோரின் பவுடரை போட்டு தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். இந்த பணியை கேபிபிசாமி எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார்.