அனைத்துக்கட்சி சார்பில் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம்

ஆங்கர்: கோவை மாநகராட்சியின் புதிய வரி சீராய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகை ஆர்பாட்டம் நடைபெற்றது.
விஓ: கட்டிடங்களை மறு அளவீடு செய்வதற்கும், குடிநீருக்கான வைப்புத்தொகையை உயர்த்தியதற்கும், குப்பைக்கான வரி என மாநகராட்சியின் புதிய வரி சீராய்விற்கு கண்டனம் தெரிவித்தும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மக்கள் விரோத செயல் என்று கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கார்த்திக் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
-அருள்