
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வீச ஆரம்பித்துள்ளது. முதல் அலையை விட 2 வது அலையின் தாக்கம் மிகவும் மோசமாகவும், தொற்றும் அதிகம் காணப்படுவதால், அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்து வந்தாலும் போதிய தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாமல் வெளிநாடுகளின் உதவியை இந்தியா எதிர்பார்த்து வரும் நிலையில், மற்றொரு பிரச்சனையாக ஆக்சிஜன் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுபாடு ஏற்பட்டதால் பல உயிர்கள் பலியாகி உள்ளன.
தற்போது கரோனாவிற்கான தடுப்பு ஊசிகள் போதிய அளவில் இல்லாததால் நாளுக்குநாள் இறப்பு விகிதமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் தற்போது ரெம்டெசிவா் என்ற தடுப்புஊசி மருந்தானது கிடைக்காமல் காலை முதல் இரவு வரை வரிசையில் நின்று மருந்துகளை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டாலும், பல நாட்களாக வரிசையில் நின்றும் மருந்து கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் இந்த மருந்து தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் சில ஆயிரங்கள் கொடுத்து மருந்தை வாங்கி நோயாளிகளிடம் 10ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் மாடர்னா என்ற கோவாக்சின் மருந்து தனியார் மருத்துவமனைகளில் சுமார் 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மருந்து தற்போது கிடைக்காமல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 20 வயது பூர்த்தியடைந்தவா்கள் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டால் மூச்சு திணறல், சுவாசம் தொடர்பான பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளமுடியும் என்று கூறுகின்றனா்.
எனவே இந்த மருந்திற்கு சந்தையில் பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் நிறுவனங்கள் இதன் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் இந்த மருந்தின் உற்பத்தியை அதிகபடுத்திட வேண்டும் எனவும், அரசு உடனடியாக இந்த மருந்தை தயாரிக்க அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனா். பல மடங்கு விலை உயா்வில் விற்கப்படும் இந்த மருந்தை அரசு மட்டுமே பொதுமக்களுக்கு நேரடியாக பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனா்.