Woman murdered

Advertisment

கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குளத்தில் மிதந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை அடுத்த பனமரத்தூர் அருகே செல்வாம்பதி குளம் உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இக்குளம் அமைந்துள்ளது. தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நிறைந்துள்ளது. இந்நிலையில் குளத்தின் ஓரத்தில் தலை, கைகள், மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாக செல்வபுரம் போலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இதனையடுத்து அங்கு வந்த போலிசார் நீரில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களை போலிசார் தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார் எந்த ஊரை சார்ந்தவர், யார் அவரை கொலை செய்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.