Skip to main content

டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்

Published on 17/10/2017 | Edited on 17/10/2017
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: 
இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் நிலவும் டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழு கடந்த 13-ம் தேதி சென்னை வந்தது. இந்த குழுவில் அசுதோஷ் பீஷ்வாஸ், ஸ்வாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கரக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர். குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். 

சென்னை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றும் இந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமலூர் அரசு மருத்துவமனை மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளையும் அவர்கள் கேட்டறிந்தனர். 

இந்நிலையில் டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வை நிறைவு செய்துள்ள மத்திய குழு, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுகடன் ஆலோசனை நடத்துகிறது. டெல்லி செல்லும் இந்த குழுவினர், இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

சார்ந்த செய்திகள்