Skip to main content

பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட கல்லூரி மாணவர் கைது

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட
கல்லூரி மாணவர் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி 7-ஆவது வார்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கௌதமன் (வயது-19). இவர் திருச்சி மாவட்டம், துறையூரிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டயம் படித்து வருகிறார்.

நேற்று காலை இவர், தம்மம்பட்டி முஸ்லிம் தெரு அருகே உள்ள செக்குமேடு பகுதியில் உள்ள பேரூராட்சி பொது கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வந்த அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.

இதையறிந்த அப்பகுதியினர் திரண்டு சென்று கழிவறைக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த கௌதமனை பிடித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்களின் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் விஜயகுமார் கௌதமனை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் கௌதமன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்