கோவையில் மாநகராட்சியை கண்டித்து
திமுக மறியல் போராட்டம்
கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டதை கண்டித்து, சிங்காநல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பல ஆயிரக்கணக்கானோர் கைது
கோவை மாநகராட்சியில் அன்மையில் வரி சீராய்வு என ற பெயரில், உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்டவற்றை இரத்து செய்யக்கோரி, திமுக, தலைமையில் அனைத்து கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கோவை - திருச்சி சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மாநகராட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாகவும், புதிய வரி விதிப்புகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தின்போது, போராட்டக்கார்ர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டியின்போது கூறுகையில்;- மாநகராட்சி சார்பில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தவர், இந்த வரிகளை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது என அனைத்து கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த வரிகளை வாபஸ் பெறா விட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று எச்சரித்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்எல்ஏ, முத்துசாமி உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அருள்