மணல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரி சி.ஐ.டி.யு கண்டண ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தமிழகத்தில் நிலவி வரும் மணல் தட்டுப்பாட்டை போக்க கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி.யு கிளைச்செயலாளர் கருப்பசாமி தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய சி.ஐ.டி.யு மாவட்டசெயலாளர் சிவாஜி, ஓ.பி.எஸ்,ஈ.பி.எஸ் சேர்ந்து கொண்டு மணல் மாபியாக்களை உருவாக்கி கொண்டு வருகின்றனர். இவர்களால் தென்மாவட்டங்களில் கட்டுமான தொழில்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்காண மக்கள் வேலை வாய்ப்பை இழந்து,மாற்று தொழில் இல்லாமல் தவித்து வருகின்றனர். மணல் விலை,கம்பி விலை,செங்கல் விலை என்று தொடர்ந்து கட்டுமான பொருட்களிட் விலை உயர்ந்து கொண்டு போகிறது. இதற்கு பொறுப்பற்ற தமிழக அரசே காரணம் என்றார்.
மேலும் மணல் விலையை கட்டுபடுத்து,எடுபுடி எடப்பாடி அரசே மக்களின் பணத்தை கொள்ளையடிக்காதே,உங்களின் அரசை காப்பாற்றி கொள்வதில் குறியாக இருக்காதே,மக்களின் நிலைமையும் நினைத்து பார் என்று கோஷங்களை எழுப்பினர்.
- பாலாஜி