சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திருவாரூர், தஞ்சாவூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு பணம் தவிர வேறு வகையில் பணம் புழங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரத்னவள்ளி, மனோகரன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. சார்பதிவாளர் பசுபதி உட்பட அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பணம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.