Skip to main content

அமைப்பு சாரா தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
அமைப்பு சாரா தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் 

அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேங்கியுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற கோரி அமைப்பு சாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கடந்த அக்டோபர் 2 ந்தேதி சென்னையில் பிரச்சார வாகன பயணம் துவங்கியது. இந்த பிரச்சார பயணம் மதுரை, தேனி, திண்டுக்கல் வழியாக இன்று கோவை வந்தடைந்த்து. இந்த வாகனத்தை கோவை மாவட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்களின், HMS, LPF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக வரவேற்று கோரிக்கை விளக்க கூட்டம், கோவை திருச்சி சாலையில் உள்ள தொழிலாளர் நல அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்களில், மூன்று சதவீதத்தை அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும், கட்டாய பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அனைத்து நல வாரியங்களிலும், லெவி, ஒரு சதவீதம் வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

-முகில்

சார்ந்த செய்திகள்