கோவையில் சிறந்த சேவையாளர், மாணவர் விருது வழங்கும் விழா!
முன்னாள் மாணவர் நற்ப்பணிமன்றம் மற்றும் அன்பு இயக்கம் இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த சமூக சேவையாளர் விருது மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் நலனில் அக்கறை, சமூக நலன் குறித்த செயல்பாடுகள் மற்றும் தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவம் குறித்து இந்த விழாவில் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன. எஸ்.மாணிக்கம் விருது வழங்கும் விழாவை தொடங்கிவைத்தார். சிறந்த சேவையாளர் விருதினை ஈரோடு மாவட்டம் ‘வி ஃபார் யூ’ என்ற அமைப்பைச் சேர்ந்த கேர் 24 விவேக் பெற்றுக்கொண்டார். சிறந்த மாணவர்களுக்கான விருதுகளை முகுந்தன், அர்ச்சனா செல்வி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.