Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் கருப்பு துணி பட்டை அணிந்து போராட்டம்

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் கருப்பு துணி பட்டை அணிந்து போராட்டம்



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு செப்-மாத ஊதியம் இன்று வரை வழங்காததை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை, பேரணி, உண்ணாவிரதம், மணித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போரட்டங்களை தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதன் கிழமை ஊழியர்கள் அனைவரும் கருப்பு துணி பட்டை அணிந்து வகுப்புகளை புறகனித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத ஊதியம் தாமதமாக வழங்கும் அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். மேலும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பயன்களையும் உடனே வழங்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். 

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்