அம்பேத்கர் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்; பாராட்டு விழா

புதுக்கோட்டை, செப்.25- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இயங்கிவரும் பாபாசாகேப் அம்பேத்கர் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இரண்டாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா மற்றும் வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பயிற்சி மையத்தின் தலைவர் துணை வட்டாட்சியர் த.சுகுமார் தலைமை வகித்தார். முதலாமாண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கியும் இரண்டாமாண்டு பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்தும் தமுஎகச மாநில துணைத் தலைவர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மேடைக்கலைவாணர் என்.நன்மாறன் சிறப்புரையாற்றினார்.
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்டத் துணைத் தலைவர் எம்.அசோகன், தமுஎகச மாவட்டத் தலைவர் ரமா ராமநாதன், செயலாளர் சு.மதியழகன், வட்டாட்சியர் எஸ்.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன், பாரதி அறக்கட்டளை நிர்வாகி ஆர்.உதயகுமார், அம்பேத்கர் அறக்கட்டளை நிர்வாகி ஆறு.நீலகண்டன், மிடறு முருகதாஸ், சாமியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக அம்பேத்கர் பயிற்சி மையயத்தின் செயலாளர் ரெ.பிச்சைமுத்து வரவேற்க, பொருளாளர் பி.வீரபாலன் நன்றி கூறினார்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், தமுஎகச கிளைத் தலைவர் ஷெல்லி மனோகர், பொருளாளர் துரை.அரிபாஸ்கர், அறிவியல் இயக்க ஒன்றியச் செயலாளர் மா.சிவானந்தம் மற்றும் பயிற்சி மைய நிர்வாகிகள் மு.முத்துக்குமார், க.பிரபாகரன், சு.பால்சாமி, கோ.மாணிக்கம், ப.ராயேஜந்திரன், கு.பிரகாஷ், வீ.முத்து, ரெ.சுதாகர், வி.சிற்றரசன், செ.கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-இரா. பகத்சிங்