Skip to main content

அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்ததுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு: சத்யராஜ் பேச்சு

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்ததுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு: சத்யராஜ் பேச்சு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அடையாறில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தினுள் கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மணிமண்டப திறப்பு விழா இன்று காலை நடந்தது. காலை 10.20 மணியளவில் துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். 

திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

இந்த விழா மிகவும் மகிழ்ச்சிகரமானது. எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். கமலும், ரஜினியும் ஒன்றாக இருக்கிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா. சரத்குமாரும், நாசரும் அருகருகே இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு.

கமலுடன் அமைச்சர் ஜெயக்குமார் கைகுலுக்குகிறார். எல்லோரது முகத்திலும் புன்னகை தவழ்கிறது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் அழைத்ததும் திறப்பு விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் வந்து இருக்கிறார். நடிகர் திலகத்தின் பெருமையை அவரது குடும்பத்தினர் கட்டிக்காத்து வருகிறார்கள்.

அவரது வசனத்தை பேசிதான் பலர் நடிப்பதற்கே வந்தனர். பராசக்தி வசனத்தை பேசிதான் நான் எஸ்.பி.முத்துராமனிடம் வாய்ப்பு கேட்டேன். நடிப்பு துறைக்கு வருபவர்களுக்கு பாலபாடமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்