Skip to main content

அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு

Published on 09/06/2019 | Edited on 09/06/2019

 


சென்னையில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பங்கேற்க உள்ளனர். 

 

m

 

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேச தொடங்கியுள்ள நிலையில் கட்சியின் இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.  இதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்