நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த மேற்கு பகுதியில் உள்ளது உவரி கடல். இந்த உவரி கிராமத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இன்று மதியம் 03.00 மணியளவில் உவரி கடற்கரை அருகே உள்ள கப்பல் மாதா கோவில் அருகே இறந்த நிலையில் ஒரு பெரிய திமிலங்கலம் கரை ஒதுங்கியது. இந்த தகவலை அறிந்த கிராம மக்கள், அதை பார்த்தப்படி செல்கின்றனர். இது தொடர்பாக, அந்த கிராமத்தில் உள்ள மீன்பிடி தொழிலாளர்கள் சிலர், இது போன்ற திமிங்கலம் மேற்கு கடற்கரை பக்கம் ஒதுங்கியதில்லை.

Advertisment

nellai district near Uwari The whale shore is secluded fishermen shocked

இந்த திமிங்கலம் இறந்து ஒரு வாரம் இருக்கும். இதற்கான காரணம் திமிங்கலத்தின் உடல் முழுவதும்அழுகிய நிலையில் உள்ளது. இதன் எடை சுமார் 1.5 டன்னுக்கும் அதிகமாக இருக்கும். இது வரையிலும் மீன்வளத்துறையைசார்ந்தஅதிகாரிகளோ, வருவாய்துறையினரோ கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பார்வையிட வரவில்லை என்கிறார்கள்கிராம மக்கள். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.