Skip to main content

அமமுகவை கட்சியாக பதிவு செய்தார் தினகரன்

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக  டிடிவி .தினகரன் தேர்வு செய்யப்பட்டார்.   இதையடுத்து அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

 

 அமமுகவிற்கு ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.   மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.   நிலையான சின்னத்தை பெற்றிடும் முயற்சியி  அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி.தினகரன்.  டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்தார்.

 

tt


 

சார்ந்த செய்திகள்

Next Story

"கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருப்பவர்" - மனோபாலா குறித்து எடப்பாடி பழனிசாமி

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

edappadi palanisamy about manobala

 

பிரபல திரை பிரபலம் மனோபாலா (69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனை குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட நபராக திகழ்ந்தவர். இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வட பழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான மனோபாலா உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும், தலைமை கழக பேச்சாளருமான மனோ பாலாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

அமமுக-வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும்  ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

 

 

Next Story

சுதாரித்த எடப்பாடி! - மூட் அவுட்டான தினகரன்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

alert edappadi palanisamy - Mood out Dinakaran

 

தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று (26.02.2021) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 19- ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ளன.

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மற்ற அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் தீவிர முனைப்புடன் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் இறங்கியுள்ளன. அந்தவகையில், காங்கிரசுடன் திமுக தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. அதேபோல், அதிமுகவும் பாஜகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ள சசிகலா அமைதியாகக் காய்களை நகர்த்திவருவதாகச் சொல்லப்பட்டது. கடந்த, 24-ஆம் தேதி அன்று சரத்குமார், சீமான், அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சசிகலாவை சந்தித்தனர். இதுவெறும், மரியாதை நிமித்தாமண சந்திப்பென்றே சொல்லப்பட்டது. ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருப்பதாக சில அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்தநிலையில், நேற்று திடீரென அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த சமக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்து அதிமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தார். அடுத்த சில மணி நேரங்களில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஐ.ஜே.கே.-வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தனர். 

 

இதற்கிடையில், சமீபத்தில் நடந்துமுடிந்த அமமுக பொதுக்குழுவில், 'தினகரனை முதல்வர் ஆக்க அயராது பாடுபட வேண்டும்' என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தினகரன் அறிவித்தார். இதனால், சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, தனது முதல் அசைன்மென்ட்டாக பாமகவிடம் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை ஒருவழியாக இறுதி செய்துவிட்டார். 'உள்இடஒதுக்கீட்டை வழங்கியதால்தான் குறைவான தொகுதிக்கு ஒப்புக்கொண்டோம்' என அன்புமணியே அறிவித்துள்ளார். இதன்மூலம், தொகுதிப்பங்கீட்டில் பாமக திருப்தியாக உள்ளதாகவே தெரிகிறது. அதேசமயம், சமகவை அதிமுகவிடம் இருந்து பிரித்தது போலவே பாமகவையும் பிரிக்க நினைத்த தினகரன் தரப்பு கடும் ஏமாற்றத்தில் உள்ளது.