Skip to main content

வாடிப்பட்டியில் லாரி உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

Published on 25/09/2017 | Edited on 25/09/2017

 வாடிப்பட்டியில் லாரி உரிமையாளர் வீட்டில்
 50 பவுன் நகை கொள்ளை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மைக்கேல் ஜான் கென்னடி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். லாரி உரிமையாளரான இவர் நேற்று குடும்பத்துடன் பட்டிவீரன்பட்டி சென்று அங்குள்ள அவரது தோட்டத்தை பார்த்து விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். இன்று காலை வீட்டின் பீரோ உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்து பார்த்த போது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைந்து உள்ளே வந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது.

 இது குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- முகில்                        

சார்ந்த செய்திகள்