சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டையை சேர்ந்த முருகேசன்(47). இவர் காடையாம்பட்டியில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த 2010ம் ஆண்டு இவரிடம் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு உடல்நிலை மோசமானதால், அந்த நபர் அளித்த புகாரின்பேரில் மருத்துவ குழுவினர் முருகேசனின் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முருகேசன் 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஓமலூர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், போலி டாக்டர் முருகேசனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.