திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து அப்பா மகன் பலி!

திருச்சி மாவட்டம் மலைகோட்டை அருகே சறுக்கு பாறை பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு 15 வருடம் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக்கான காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் அருகில் உள்ள கட்டிடம் இடிக்கபட்டதால் இந்த கட்டிடம் வழுவிழந்து இடிந்ததாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியுள்ள இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை கார்த்திக், 5 வயது மகன் ஹரீஷ் ஆகியோர் கட்டட விபத்தில் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் மீட்கப்பட்டு திருச்சி அரசு அருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஜெ.டி.ஆர்