குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அணைக்கு குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பண்ருட்டி லிங்க் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் பிரகாஷ் (எ) முருகன். அதிமுக பிரமுகர் இவரது மகன் திவாகரன் (15). பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் ஜெயப்பிரியா நகரில் ஜெ.பி.சலூன் நடத்தி வருபவர் வெங்கடேசன். இவரது மகன் ஹரி (15) இவர்கள் இருவரும் பண்ருட்டி லிங்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் மேலும் ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு நேற்று குளிப்பதற்காக அருகில் உள்ள திருவதிகை அணைகட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு அணையின் மேலே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது சேறும் சகதியுமாக இருந்த ஆழமான புதைகுழியில் சிக்கி வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி மூவரும் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் காலையில் குளிப்பதற்காக சென்ற மகன்கள் இரவு வரை வீடு திரும்பாததை கண்டு பெற்றோர்கள் பிள்ளைகளை பல இடங்களில் தேடி வந்தனர்.

பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு பகுதியில் மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து நேற்றிரவு 10 மணியளவில் அங்கு சென்று பார்த்தனர் காணாமல் போனதாக தேடப்பட்ட 3 மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இது தான் என்பதை உறுதி செய்து அந்த பகுதியில் காணாமல் போன மாணவர்களை செல்போன் மற்றும் டார்ச் லைட் மூலம் தேடினார்கள் மூவரின் செருப்பு, மற்றும் உடைகள் இருந்தது கண்டு பிடித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுதீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் ஆற்றில் இறங்கி மாணவர்களின் உடலை தேடினார்கள், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு, தாசில்தார் விஜய் ஆனந்து ஆகியோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஒருவர் பின் ஒருவராக மூவரின் உடலையும் பத்திரமாக மீட்டனர். நீரில் மூழ்கி பலியான மாணவர்களின் உடலை பார்த்து பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். மூவரின் உடலும் பிரேத பரிசோதணைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பண்ருட்டியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
- எஸ்.பி.சேகர்