Published on 08/05/2021 | Edited on 09/05/2021

இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. முன்கள பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவர்கள் முதலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்கனவே போடப்பட்டு இருந்தது. இதனால் உயிரிழப்பு முதல் அலையை விட இரண்டாம் அலையில் குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு செவிலியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புணிபுரியும் இந்திரா மற்றும் வேலூரை சேர்ந்த செவிலியர் பிரேமா அகிய இருவரும் கரோனா தொற்றுக்கு பலியானார்கள்.