கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, போதை பாக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் போலீசார் கொருக்குப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளில் போதை பொருள் விற்றுக்கொண்டிருந்த 2 பெண்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுகந்தி (25), துளசி (26) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.