Skip to main content

உசிலம்பட்டி அருகே முறுக்கு கம்பெனி அதிபர் வீட்டில் 14 பவுன் தங்கம் திருட்டு

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
உசிலம்பட்டி அருகே முறுக்கு கம்பெனி அதிபர் வீட்டில்
 14 பவுன் தங்கம் திருட்டு

மதுரைமாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டியைச் சேர்ந்தசுரேஷ் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் முறுக்கு கம்பெனி வைத்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது சொந்தஊரில் உள்ளதன் வீட்டை பூட்டிவிட்டு சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வீட்டின் முன்புறவிளக்கை தினமும் சுரேஷ்-ன் சகோதரி பேச்சியம்மாள் என்பவர் இரவு லைட் போட்டுவிட்டு காலை மீண்டும் அமத்திவிட்டுசெல்வது வழக்கம்.
 
நேற்று இரவுவீட்டின் முன்பகுதியில் உள்ள விளக்கை போட்டுவிட்டு சென்ற பேச்சியம்மாள் காலை வழக்கம் போல் விளக்கை அனைக்கவந்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீடு திறந்துகிடப்பதையும் பீரோ உடைக்கபட்டு உள்ளே இருந்ததுணிகள் கீழே கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள் உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதன் அடிப்படையில் உசிலம்பட்டி குற்றபிரிவு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலிசார் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் வீட்டில் இருந்த 4பவுன் தங்க நகைமற்றும் 3 கொலுசு திருடு போயிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து பூட்டியிருந்த வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

- முகில்


சார்ந்த செய்திகள்