ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் - இளங்கோவன் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இருவரும் நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திருநாவுக்கரச்சரும், இளங்கோவனும் ராகுல்காந்தியிடம் வழங்கினார்கள். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இருவரும் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தார்கள்.
19 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை நியமனம் செய்வதற்கான அதிகாரத்தை சோனியா, ராகுல்காந்தி ஆகியோருக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று சோனியாகாந்தி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவரை இருவரும் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.