Skip to main content

நடிகை ரம்யா காங்கிரஸ் பதவிக்கு தேர்வு

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
நடிகை ரம்யா காங்கிரஸ் பதவிக்கு தேர்வு

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தலைவராக ரோதக் எம்.பி.,யும், அரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவின் மகனுமான தீபந்தர் சிங் ஹூடா இருந்து வந்தார். இந்த நிலையில் அவர்கள் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு நடிகை ரம்யாவை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளார்.

குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், பாஜவை சமாளிக்கும் வகையில் ராகுல் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். சமூக ஊடகங்களில் பாஜக மற்ற கட்சிகளை விட அதிக பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் தற்போது களத்தில் இறங்கி வேலைபார்க்க ஆரம்பித்துள்ளது.

சார்ந்த செய்திகள்