அருணாச்சல் ராணுவ முகாம் மீது நக்சலைட்டுகள் குண்டு வீச்சு
நாகலாந்து தேசிய சோசலிஸ்ட் கூட்டமைப்பு(கப்லாங்) என்ற நக்சலைட்டு அமைப்பினர் நேற்று அதிகாலை 1.15 மணி அளவில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் லாங்டிங் மாவட்டம் நியாவ்சா என்ற பகுதியில் இயங்கி வரும் ராணுவ தளம் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ தளம் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கையெறி குண்டுவையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தும் நக்சலைட்டுகள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலால் ராணுவ தளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.