Skip to main content

காட்டை அழிச்ச ஜக்கி நதியை காப்பாத்த போறாராம்!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
காட்டை அழிச்ச ஜக்கி நதியை காப்பாத்த போறாராம்!



பல விதிமுறைகளை மீறி ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுர அடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்று தமிழக அரசாங்கத்தால் நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட ஜக்கி வாசுதேவ், 7 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து நதிகளை காப்பாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, அடுத்து எதைக் கொள்ளையடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பே அதிகரித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலவாறாக செய்திகள் உலா வருகின்றன.

இந்தப் பயணத்துக்கான தொடக்க விழா மேடையில ஜக்கியோடு பஞ்சாப் கவர்னர் கிரிக்கெட் வீரர் சேவாக், லேடி டீம் கேப்டன் மித்தாலி ராஜ், கார் ரேஸ் நரேன் கார்த்தி உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

இதுமாதிரியான பிரபலங்களுக்கு பணம் செலவழித்து வரவழைத்து செய்தியாக்கிவிட்டு, வேறு வகையில ஆட்டய போடறதுதான் ஜக்கி வாசுதேவின் வாடிக்கை என்று கிண்டல் வைரலாக பரவுகிறது.

ஜக்கி வாசுதேவ் குறித்து விவரம் தெரியாமலேயே பலரும் பணத்துக்காக வந்து கலந்துகொள்வதாகவும், இப்படிப்பட்ட சாமியார்கள் பின்னர் சிக்கலில் மாட்டும்போது இந்த பிரபலங்களும் சேர்ந்து சிக்குவதாக அக்கறையுடன் பதிவுகள் இடப்படுகின்றன.

தேரா சச்சா சவ்தா ஆசிரமத்தின் குர்மீத் கூட இப்படி நின்னு போஸ் கொடுத்த பிரபலங்கள் பலர் இப்போது விழி பிதுங்கி நிற்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த விழாவுல கலந்துகிட்ட இன்னொரு முக்கிய புள்ளி யாரென்று பார்த்தால் நம்ம அமைச்சர் வேலுமணி.

'' பல விதிமுறைகளை மீறி ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுர அடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது'' என்று ஐந்து மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசில் இவரும் அங்கம் வகிக்கிறார். ஆனாலும் ஜக்கி வாசுதேவ் அருகே நிற்கிறார். அப்படியானால், அந்த வழக்கு என்னாகும்? என்று வினா எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சார்ந்த செய்திகள்