பிரபல தொழில் அதிபரும் , ஐடிசி குழும தலைவருமான யோகேஷ் சந்தர் தேவேஸ்வர் உடல் நல குறைவால் காலமானார் . இவருக்கு வயது 72 ஆகும். குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ஐடிசி குழுமத்தில் 1968-யில் பணியில் சேர்ந்தார் தேவேஸ்வர்.அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தின் இயக்குனராக பதவியேற்றார்.அதனைத் தொடர்ந்து ஜனவரி 1 ஆம் தேதி 1996-ல் ஐடிசி நிறுவனத்தின் புதிய சேர்மனாக பதவியேற்றார்.

அதே போல் ஐடிசி நிறுவனம் ஆனது 100 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடைப்போடுகிறது. இதற்கு கடினமாக உழைத்தவர் தேவேஸ்வர். இந்தியாவில் உள்ள முன்னணி கம்பெனிகளில் ஒன்றாக ஐடிசி நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான புகையிலை பொருட்கள் தாண்டி உணவு பொருட்களில் ஐடிசி நிறுவனம் நுழைய காரணமாக இருந்தவர் தேவேஸ்வர் ஆவர். இவரின் இந்த நிர்வாக திறமையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கியது. மேலும் ஐடிசி நிறுவனத்தை எப்எம்சிஜி நிறுவனமாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர்.