
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடத்தில் உள்ள இட்கிடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாப சபால்யா. இவர், பா.ஜ.க சார்பில் துணை பஞ்சாயத்து தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார். இவர், ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலை போடுவதற்காக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வீட்டின் முன்பு ஒரு நுழைவு வாயிலை பத்ம்நாப சபால்யா அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண், தனது நிலைமையை எடுத்துக்கூற சென்றுள்ளார். அப்போது பத்மநாபா சபால்யா அந்த பெண்ணிடம் அநாகரீகமாகவும், அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அந்த பெண், தனது செல்போனை எடுத்து அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது, தனது ஷார்ட்ஸை கழற்றி ஆபாசமான முறையில் நடந்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதன். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாயத்து தலைவர் ஒருவர், பெண்ணிடம் ஆபாசமான முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பத்மநாபா சபால்யாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது. மேலும், தனது பஞ்சாயத்து தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யுமாறு பத்ம்நாப சபால்யாவை பா.ஜ.க அறிவுறுத்தியுள்ளது.