முன்னாள் காங்., எம்எல்ஏவுக்கு டெங்கு காய்ச்சல்
புதுச்சேரியில் டெங்குவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மாரிமுத்துவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் நாராயணசாமி நேற்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளையும் பார்த்து, டாக்டர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.