
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறித்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. 3 நாட்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களை குறித்து பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் இந்தியா முறிஇந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக களமாடிய இந்திய ராணுவத்தினரை பாராட்டும் வகையில், சில தினங்களுக்கு முன்பு குஜராத் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள வீரர்களை சந்தித்தார். பாகிஸ்தான் தாக்கி அழித்ததாகக் கூறிய எஸ்-400 வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு முன் நின்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படைத் தளத்திற்கு இன்று (16-05-25) சென்றுள்ளார். விமானப்படை அதிகாரிகளை பாராட்டிய ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சாதாரண பாகிஸ்தானியரிடம் இருந்து வரி வசூலித்த 140 மில்லியன் ரூபாயை மசூத் அசாருக்கு செலவிட பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கிறது. முரிட்கே மற்றும் பஹாவல்பூரில் அமைந்துள்ள லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகியவற்றின் பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் அரசாங்கம் நிதி உதவியை அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வரும் ஒரு பில்லியன் டாலர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி நிச்சயமாக இந்த பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும். இதனால், பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்வது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாகும். சர்வதேச நாணய நிதியம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாத சக்திகளின் கைகளில் சிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவால் தாக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத தளங்களில் ஒன்றான முரிட்கேவை பார்வையிட்ட பாகிஸ்தான் அமைச்சர் ராணா தன்வீர் உசேன், அரசாங்கம் அந்தப் பகுதியை தனது சொந்த செலவில் மீண்டும் கட்டியெழுப்பும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.