
காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளைஞர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை வெளியே அழைத்து வந்த பொழுது பெண் வீட்டார் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். உறவினர் பெண்ணான கார்த்திகா என்பவரை நரேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கார்த்திகா கர்ப்பமடைந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு அழைத்து வந்தபோது சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் பாலுசெட்டி போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் புகாரை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்பதால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.