Skip to main content

சோனியாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு கொலை மிரட்டல்

Published on 15/10/2017 | Edited on 15/10/2017
சோனியாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு கொலை மிரட்டல்

தென்கிழக்கு டெல்லியின் ஜங்புரா பகுதியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் அஜய்குமார் அகர்வால். இவர் ஹஸ்ரத் நிஜாமுதின் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், நேற்று மதியம் எனது வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்னையும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களையும் தரமற்ற வார்த்தைகளால் திட்டி எழுதியுள்ளனர். மேலும், எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

அஜய்குமார் அகர்வால் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜய்குமார் அகர்வால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் 2014-ல் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர். ஒரு லட்சத்து 73,721 வாக்குகளை பெற்றார். இவர் சோனியா காந்தியிடம் 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்