Skip to main content

லாக் டவுனால் நேர்ந்த நன்மை... ஆனால் அது தொடருமா..?

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
ிு



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 74,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.


இதன் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் இந்தியா முழுவதும் பல இடங்களில் காற்று மாசுபாடு என்பது முற்றாக குறைந்தது. வட மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு பிறகு வானம் தெளிவாக தெரிந்ததாக செய்திகள் வெளியானது. தமிழகத்தில் கூட தலைநகர் சென்னையில் காற்று மாசுபாடு என்பது குறைவாக இருந்தது. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக கார்பன் டை ஆக்ஸைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. தொழிற்சாலைகள் இயங்காததும், வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை பட்டதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. தனியார் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. இந்த நிலை தொடருமா எனவும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் 

 

 

சார்ந்த செய்திகள்