Ezhilan MLA says People will not forgive the EPS for betraying them

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. எழிலன் இன்று(20.06.2025) மாலை 05.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கீழடி விவகாரம்குறித்துப் பேசுகையில், “தமிழ்நாட்டில் கீழடி ஆய்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உள்ள திராவிட மாடல் அரசு கீழடிக்காக மேற்க்கொண்ட பணிகளைப் பற்றியும் அறிவீர்கள். கீழடி ஆய்வின் போது அதை மேற்கொண்ட அமர்நாத் பணி மாற்றம் செய்த, கீழடி ஆய்வின் உண்மைத் தன்மையை கேள்வி எழுப்பிய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தியது.

அதிமுகவின் மாஃபா பாண்டியராஜன் அதுபற்றி கருத்துகளை தெரிவித்துள்ளார். கீழடி வரலாறு குறித்து முதலில் தெரிவித்துவிட்டு, பிறகு அவருக்குப் பதில்கள் செல்கிறேன். பள்ளிக்கூட ஆசிரியர் வி.பாலசுப்பிரமணியன் 1971 ஆம் ஆண்டு கீழடி நாகரிகம் குறித்து சில ஆய்வுத் தரவுகளை எடுத்து கூறியதன் பின், அப்போதை ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தில் 2013-14இல் கீழடி ஆய்வு தளம் என இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI-archaeological survey of india) ஒரு ரிப்போர்ட் சமர்பித்தது.

Advertisment

2014இல் பாஜக அரசு வந்தபின் அமர்நாத் தலைமையில் இரண்டு கட்ட அளவில் தொல்லியல் ஆய்வு நடத்தினர். 2016 முடியும் தருவாயில் அந்த ஆய்வை நிறுத்தி கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டார். அந்த ஆய்வை மூட சொன்னர்கள். தனியார் நிலத்தில் ஆய்வு நடப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதாகவும் அகழ்வாராய்ச்சியை தொல்பொருள் ஆய்வை நிறுத்துகின்றனர். அந்த சூழலில் கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘அந்த அறிக்கையில் கீழடி நாகரித்துக்கும் - சிந்துவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பை கீழடி ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை சொன்ன பொய் கதைகள் எல்லாம் இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது; இந்த தமிழ்நாட்டின் தென்னகத்தின் தொடக்கம்’ என கலைஞர் குறிப்பிட்டார்.

அந்த ஆய்வின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி கீழடி ஆய்வுக்கே சென்றனர். தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இதை நிறுத்தியதும் கனிமொழி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்; அந்த வரலாற்று சிறப்புமிக்க வழக்கில், எதற்காக ஆய்வுகளை நிறுத்தினீர்கள் என கேள்வி எழுப்பினர். பலரும் குரல் எழுப்பியதால் அதிமுகவினர் மீண்டும் வழக்கில் பதில் அளித்து, அதற்கு நாங்கள் உதவி செய்வதாக கூறினர். கனிமொழியின் வழக்கு தீர்ப்பில் அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து நடத்தவேண்டும்; மைசூருக்கு கொண்ட சென்ற பொருட்கள் மீண்டும் தமிழகத்திற்கு கொண்ட வர வேண்டும்; இதை பாதுகாக்க ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்று கூறினர். எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் அதிமுக அரசு – எடப்பாடி அரசு கீழடி ஆய்வைத் தொடர்ந்தது.

 Ezhilan MLA says People will not forgive the EPS for betraying them

Advertisment

2016இல் கீழடி ஆய்வு நிறுத்தப்படும்போது ஏன் அதிமுக கண்டன குரல் ஏன் எழுப்பவில்லை? தனிநபராக கனிமொழி தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏன் எடப்பாடி அரசு அதை செய்யவில்லை?. தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலுக்குத் தொன்மை அரசியலுக்கும் அதிக தொடர்பு உள்ளது. யார் யாரெல்லாம் தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் பாதுகாப்பாக உள்ளார்கள். யார் யாரெல்லாம் தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் துரோகம் செய்கின்றார்கள் என்பதை மக்கள் தெளிவாகப் பார்த்து வருகின்றார்கள். தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் துரோகம் செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமியைத் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.