
கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 40,000 பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 45,000-ஐ கடந்து வருகின்றது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000-ஐ கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,513 புதிய கரோனா பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது. 768 பேர் கரோனா காரணமாக மரணமடைந்துள்ளார்கள். நாடு முழுவதும் மொத்தமாக 15,31,669 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பது லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.