Skip to main content

பா.ஜ.க அரசு 3 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் கூட உருவாக்கவில்லை - நாராயணசாமி

Published on 30/09/2017 | Edited on 30/09/2017

 பா.ஜ.க அரசு 3 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் கூட 
உருவாக்கவில்லை -  நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-   ’’பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எடுக்கப்பட்ட மத்திய அரசின் பொருளாதார கொள்கை விளைவின் பாதிப்பு தற்போது தெரிய வந்து கொண்டிருக்கின்றது. 

பணமதிப்பிழப்பு செயல்பாடு முழுவதும் தோல்வியடைந்துள்ளது. பொருளாதாரம் 3.7% மாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இறக்குமதி பெருகி பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. 

மத்திய அரசின் தவறான கொள்கையில் மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படும்.  3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் கூட உருவாக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை 3 பங்கு குறைந்தும் கூட பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் உள்ளனர்.

சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்த்னை சந்தித்து அவரது ஆலோசனை படி கடற்கரை பாதுகாப்பு திட்டத்தின் படி வேலை நடைபெற்றுவருகின்றது.  தெற்கு பகுதியில் மற்றொரு திட்டத்திற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.  மூர்த்திகுப்பம் - காலாப்பட்டு வரை கடல் அரிப்பை தடுக்க 356 கோடி திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.  அது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
 
டெங்கு நோயை தடுக்க சரியான நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. போதுமான மருத்துவ வசதிகள் உள்ளது.  98% வியாபாரிகள் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் கொண்டுவரப்பட்டனர்.  ஜிஎஸ்டியால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. ’’

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்