Traffic workers demand for pay wage

Advertisment

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

நிலுவை ஊதியத்தை கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் 3 மாத ஊதியத்தை உடனே வழங்க கோரியும், ஒவ்வொரு மாதமும் மாத இறுதிக்குள் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்,பணிமனை தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாகபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2015 முதல் தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த EPF, GRAJIVITY, LIC உள்ளிட்ட பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த வேலை நிறுத்தத்தால் காரைக்கால், சென்னை, விழுப்புரம் மற்றும் கிராமபுறங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அரசு உடனடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் காலைவரையற்ற போராட்டமாக மாறும் என தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.