Skip to main content

ரயில் விபத்து-உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்த ரயில்வே

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Railway Department announced relief of Rs 10 lakh each to the families of the train accident victims

 

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் ஒன்றிய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய ரயில்வே சார்பில் இந்த  விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; கணவரின் வெறிச்செயல்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Husband's frenzy on extramarital affair in andhrapradesh

ஆந்திரப் பிரதேச மாநிலம், கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், ராணி திருமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், திவ்யாவுக்கும் அவர் பணிபுரிந்து வந்த அதே ஹோட்டலில் பணிபுரியும் ஜெயானந்தபால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருடைய பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஜெயானந்தபால், சித்தூர் மாவட்டம் கல்லூர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெயானந்தபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையில், திவ்யாவின் கணவர் சந்திரய்யா, நான்தான் ஜெயானந்தபாலை கொலை செய்தேன் என கல்லூர் கிராம வருவாய் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக, கல்லூர் கிராம வருவாய் அதிகாரி, சந்திரய்யாவை பிடித்து காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், திவ்யாவுக்கும், ஜெயானந்தபாலுக்குமான உறவை அறிந்த சந்திரய்யா, திவ்யாவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவருக்குமான உறவு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இதனால், சந்திரய்யா ஜெயானந்தபாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சந்திரய்யா போட்ட திட்டத்தின்படி, ஜெயானந்தபாலை சித்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூருக்கு அழைத்து வந்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் அங்கு ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் இருந்த ஜெயானந்தபாலை, அங்கு இருந்த பாறாங்கல்லை கொண்டு சந்திரய்யா அடித்து கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்திரய்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.